மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு - விசாரணையில் 3 பேர் கைது!
மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில், வயல் நிலமொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று(11.05.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், சின்னவத்தை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சரவனமுத்து பாலசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விசாரணையின் பின்னர் 3 பேர் கைது
கடந்த 08ஆம் திகதி வீட்டிலிருந்து கிளம்பிய குடும்பஸ்தர், இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயல் பகுதியொன்றில் இவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் மூன்று பேர் சந்கேதத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவும் நிலையில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam