வவுனியாவில் காட்டுப் பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு (Video)
வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று (16.11.2022) மீட்கப்பட்டுள்ளது.
யாழ். மல்லாகத்தையை நிரந்தர வதிவிடமாக கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான (வயது 48) ஜெயந்தகுமார் என்பவரே சடலமாக மீட்கப்படுள்ளார்.
வவுனியா கந்தன்குளத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் வந்து தங்கியிருந்த நிலையில் அங்குள்ள காணியினை தனிமையில் பராமரித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சடலமாக மீட்கப்பட்டவரின் குடும்பத்தினர் குறித்த நபரை கடந்த 14ஆம் திகதியிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாததால் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கமைய கந்தன்குளம் பகுதியில் பொலிஸார் நேற்று (16.11.2022) நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் காட்டுப் பகுதியிலிருந்து நாட்டுத்துப்பாக்கியுடன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பூவரசங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு - போரதீவுப் பற்றுப்பிரதேசத்திற்குட்பட்ட பட்டாபுரம் கிராமத்தில் உள்ள நீர் நிலையமொன்றிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (16.11.2022) மீட்கப்பட்டுள்ளது.
பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகசன் சூரியகுமார் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் 14ஆம் திகதியிலிருந்து காணாமல் போயிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (16.11.2022) பட்டாபுரம் கிராம நீர் நிலையமொன்றில் சடலம் ஒன்று தென்படுவதாக மக்கள் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, சடலத்த மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
