சப்புகஸ்கந்த பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்ட சம்பவம் - கணவன், மனைவி கைது
சப்புகஸ்கந்த - மாபிம பகுதியில் பயணப்பொதியிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மட்டக்குளி - சமித்புர பகுதியை சேர்ந்த கணவன், மனைவியே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலத்தை கொண்டு செல்ல சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்த்துவ தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் முன்னர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்தி...
பயணப் பையிலிருந்து சடலம் மீட்பு! காணாமல்போயுள்ள தங்க நகைகள்: அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்
