எரிந்த வாகனத்திற்குள் சடலம் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
ஹபரண- பொலன்னறுவை பிரதான வீதிக்கு அருகில் எரிந்த கெப் ஒன்றிற்குள் இருந்து நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர், கெப் ஒன்று தீப்பிடித்து எரிவதாக பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மின்னேரிய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில் தீ பரவியதாகவும், இதன்போது கெப் ஹபரணையை நோக்கி செல்லும் வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் வேறு யாரும் இருக்கவில்லை எனவும் மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீட்பு
ஒருவரை கொலை செய்து அவரது சடலத்தை வாகனத்தில் வைத்து தீ வைத்து எரிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மின்னேரியா பொலிஸாரும் பொலன்னறுவை மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் தீயை முழுமையாக அணைத்தனர்.
தீப்பிடித்த கெப் வண்டி, கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam