வீட்டின் உத்தரத்தில் தொங்கிய நிலையில் பெண் மருத்துவரின் உடல்
பேராதனை போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் ஒருவரின் உடல் அவர் வசித்து வந்த வீட்டின் உத்தரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக கடுன்னனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாய்,கணவருடன் வீட்டில் வசித்து வந்த மருத்துவர்

பேராதனை போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் சேவையாற்றி வந்த 54 வயதான பெண் மருத்துவரின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கடுன்னனாவை பிரதேசத்தில் வசித்து வந்த இந்த மருத்துவரின் மர்ம மரணத்திற்கு காரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது இன்னும் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பாக கடுகன்னனாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர் வசித்து வந்த வீட்டில் அவரது தாய், கணவர் மற்றும் உறவினரான பெண்ணொருவர் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கு பின்னரான பிரேதப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri