சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்பு சம்பவம்: வெளியானது பொலிஸாரின் அறிக்கை
அண்மையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஒரு வீட்டில் இருந்து 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குறித்த நபரும் மற்றுமொரு சந்தேக நபரும் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கடந்த நவம்பர் 11ஆம் திகதி நாககேணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பு
பாதிக்கப்பட்டவர் சிறையில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்து சிகிச்சை பெற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், மீண்டும் நோய்வாய்ப்பட்டு நவம்பர் 19ஆம் திகதி யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞரின் மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை அதிகாரியொருவர் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளான காயங்களினால் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
இளைஞரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பொலிஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் குற்றமிழைத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி: ஆசிரியர்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
