சனிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை மாவடிவேம்பு பிரதேசத்தில் விபத்துக்குள்ளான குடும்பஸ்தரின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலை (10.07) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கிண்ணையடி கிராமம் மைதான வீதியை அண்டி வசிக்கும் ஒரு குழந்தையின் தந்தையான சித்திரவேல் குலேந்திரன் (வயது 27) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்தவரென அவரது மனைவியும் தாயும் சடலத்தை அடையாளம் காட்டி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மாவடிவேம்பு உள் வீதியிலிருந்து கொழும்பு மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்தபோது வேன் ஒன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்று இவர் பலியாகியுள்ளார்.
சடலத்தை மீட்டெடுத்த பொலிஸார் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
