மர்மமான முறையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மீட்பு! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் வயோதிப பெண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்.மாவடி, சங்கரத்தை என்ற இடத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்ர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 76 மற்றும் 73 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களில் ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும், மற்றையவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.
மரணத்தில் தொடரும் மர்மம்
குறித்த வீட்டில் இருவர் மட்டுமே வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு உதவிக்கு யாரும் இல்லை என்றும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மாதாந்த உதவிப் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என்று கிராம அலுவலகர் வீடு தேடிச் சென்ற போதே இருவரும் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
