இரத்தக்காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு
பதுளை மாவட்டம், பண்டாரவளையின் இருவேறுப் பகுதிகளில் இரத்தக் காயங்களுடன் இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Taltuwa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியிள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இரத்தக்காயங்களுடன் இருவரின் சடலங்கள் காணப்படுவதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு இன்று கொண்டுவரப்பட்டது.
அதற்கமைய பண்டாரவளை - நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அதே போன்று பண்டாரவளை - மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டது.
குறித்த இரு சடலங்களும் இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 18 மணி நேரம் முன்

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
