நீர்நிலைகளில் இருந்து மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்பு!
இலங்கையில் வெவ்வேறு இடங்களில் நீர்நிலைகளில் இருந்து மூன்று ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டம், அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறு ஒன்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை, ஒக்வெலை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காரணங்கள்
இதேவேளை, கண்டி மாவட்டம், பல்லேகெலே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கண்டி, குன்னேபான பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குருநாகல் மாவட்டம், கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிகம பிரதேசத்தில் கிம்புல்வான ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கும்புக்கெடே , ஹெட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதுடைய வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்களா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
