தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள்! புலஸ்தினியை மண்ணுக்குள் தேடும் காவல்துறை!!
சாய்ந்தமருது குண்டு வெடுப்பில் உயிரிழந்த உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்வுடைய இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் உடல்கள் இன்று தோண்டி எடுக்கப்பட்டன.
குறித்த தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்ட தற்கொலை குண்டுதாரியான சாரா என்கிற புலஸ்தினி ராஜேந்திரன் என்பவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவரது உடலை மீண்டும் மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் குறித்த உடல்கள் அனைத்தையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று தோண்டி எடுக்கப்பட்டன.
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் சஹரான் ஹாசிமுடன் இணைந்து செயற்பட்டார் என கருதப்படும் கட்டுவாபிட்டி கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய ஓட்டமாவடியைச் சேர்ந்த ஹஸ்தூன் என்பவரது மனைவியான சாரா என்கிற புலஸ்தினி ஏற்கனவே உயிரிழந்ததாக பொலீசார் தெரிவித்ததுடன் உடல் கூற்றுப் பரிசோதனையில் சாராவின் பெற்றோரின் மரபணு உடன் உயிரிழந்த சடலம் ஒன்றின் மரபணு பொருந்துவதாக கூறி தற்கொலை குண்டு தாரியான சாரா உயிரிழந்து விட்டார் என பொலீஸார் விசாரணைகளை நிறைவு செய்த நிலையில் தற்போது சாரா இந்தியாவில் சிறையில் இருப்பதாகவும் உயிருடன் இருக்கும் அந்த சாரா என்பவரது மரபணுவுடன் இங்குள்ள சாராவின் பெற்றோரது மரபணு பொருந்துவதாக கூறப்பட்ட நிலையில்,சாய்ந்தமருது குண்டு வெடுப்பில் உயிரிழந்ததாக கூறி புதைக்கப்பட்ட சாரா உடலை மீண்டும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக இன்றைய தினம் உடல்கள் அனைத்தும் தோண்டி எடுக்கப்பட்டன.











