யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் சடலங்கள்! 6 ஆண்களின் உடல்கள் மீட்பு
யாழ். மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்து ஆண்களின் சடலங்கள் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
பருத்தித்துறை - சக்கோட்டை கடற்கரையிலும் , மருதங்கேணி கிழக்கு - சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்று இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இன்று கரையொதுங்கிய இரு சடலங்களுடன், கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
கடந்த சனிக்கிழமை வடமராட்சி கிழக்கு - மணற்காடு மற்றும் வடமராட்சி - வல்வெட்டித்துறை கடற்கரைப் பகுதிகளில் இரு சடலங்களும், ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு கடற்கரையில் ஒரு சடலமும், கடந்த செவ்வாய்க்கிழமை மருதங்கேணி கடற்கரைப் பகுதியில் ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தன.
கரையொதுங்கிய ஆறு சடலங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.
சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
