ரஷ்யர்களின் வன்கொடுமை! 44 உக்ரைனியர்கள் உடலங்கள் மீட்பு - முற்றுகைக்குள் 100 பேர்
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலைக்குள் இன்னமும் குறைந்தது 100 பொதுமக்கள் தங்கியிருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவிற்குள்ளான உக்ரைனிய துறைமுக நகரமான மரியுபோலில் இந்த இரும்பு ஆலை அமைந்துள்ளது குறித்த ஆலைக்குள் பொதுமக்கள் இருக்கின்றபோதும் ஆக்கிரமிப்பு ரஷ்ய படையினர் தொடர்ந்தும் ஆலையின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து ஆலைக்குள் தீப் பரவலும் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆலைக்குள சிக்கியுள்ள அசோவ் படைப்பிரிவைச் சேர்ந்த உக்ரைன் படையினர், தாம் ரஷ்யாவிடம் சரணடையப் போவதில்லை என உறுதியளித்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் ரஷ்ய படையினரால் அழிக்கப்பட்ட இசியம் கட்டிட இடிபாடுகளில் 44 பொதுமக்களின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்ட ஐந்து மாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்தே இந்த 44 பொதுமக்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக உக்ரைனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது பொதுமக்களுக்கு எதிரான ரஷ்ய இராணுவத்தின் மற்றொரு பயங்கரமான போர்க்குற்றம் என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்