வங்கியின் கிளைகள் திடீரென மூடப்பட்டமையினால் மக்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி
இலங்கை வங்கியின் சில கிளைகள் இன்று மதியம் 12.30 மணியின் பின்னர் கொடுக்கல் வாங்கல்கள் செயற்பாடுகளை நிறுத்தியமையால் வாடிக்கையாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு வழங்கவிருந்த ஊக்கத்தொகை தொடர்பில் நிதி அமைச்சின் ஒப்புதல் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஊழியர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டின் இலாபத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள இலங்கை வங்கியின் இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கு நிதி அமைச்சின் ஒப்புதல் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வங்கிக் கிளைகள்
இந்நிலையில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திசாநாயக்கவை ஊடகங்களை தொடர்பு கொண்ட போது, வங்கிக் கிளைகள் மூடப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் வங்கிக் கிளைகள் மூடப்பட்டமை தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்ட போது, தொலைபேசியை துண்டித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.