புத்தளத்தில் தீக்கிரையாக்கப்பட்ட கடற்றொழில் உபகரணங்கள்
புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவிற்குபட்ட ஆண்டிமுனைப் பகுதியில் இனந்தெரியாத விசமிகள் படகு, இயந்திரம், 3 வல்லங்கள் மற்றும் 4 வலைகளுக்குத் தீ வைத்துள்ளனர்.
குறித்த சம்பமானது இன்று(19.01.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது படகு, இயந்திரம், வல்லம் முற்றாக தீக்கிரையுள்ளதாகவும் 3 வல்லங்கள் பகுதியில் சேதமாகியுள்ளதாகவும் 4 வலைகளும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட படகு, இயந்திரம், வல்லங்கள் மற்றும் வலைகள் சுமார் 2 கோடி 15 இலட்சம் ரூபா பெருமதியென கடற்றொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
கடந்த ஒருமாதக் காலமாக தமிழருக்கும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் தொழில் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் இதனால் இந்த வேலையை பெரும்பான்மை இனத்தவர்ககள் செய்திருக்கலாமெனவும் கடற்றொழிலாளர்கள் சந்தேகிப்பதாக தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் இது வரையில் எவறும் கைது செய்யப்படவில்லையெனவும் சம்பவம் தொடர்பில் விசாராணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உடப்பு பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |



