மட்டக்களப்பு - வாகரையில் ஏற்பட்ட மினி சூறாவளியால் சேதமடைந்த படகுகள்
மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்றொழில் படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்தில் நேற்று (05.01.2024) இரவு வீசிய இந்த சூறாவளியால், 6 படகுகள் மற்றும் 3 எஞ்ஜின்கள் தேசமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்துள்ளார்.
வாகரை காயங்கேணி கடற்கரையில், கடற்றொழிலாளர்களால் இயந்திர படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சூறாவளி வீசியுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
அத்துடன், கடந்த வாரம் பெய்து வந்த கடும் மழையினால் ஏற்பட்ட ஆற்று வெள்ளம் காரணமாக, கல்லரிப்பு பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை, அந்த பிரதேசத்துக்கு உழவு இயந்திரம் மற்றும் படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 22 குடும்பங்கள் தொடர்ந்தும் கதிரவெளி கனிஸ்ட வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வெள்ள நீர் வழிந்தோடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
