தலைமன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ள படகுச் சேவை
உலக சுற்றுலா தின விழாவையொட்டி மன்னார் மாவட்டத்தில் முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும், அதற்கான வெள்ளோட்ட நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெற உள்ள உலக சுற்றுலா தின விழா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று (23) மாலை மன்னார் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
சுற்றுலா தின நிகழ்வு
குறித்த கலந்துரையாடலில் அழைக்கப்பட்ட திணைக்கள பிரதி நிதிகள் கலந்து கொண்டதோடு ஏற்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இலங்கை வரலாற்றில் மிகவும் வரலாற்று ரீதியாக ஒரு முதன்மையான வரலாற்றைக் கொண்ட மன்னார் தீவின் உல்லாசப் பயணத்துறை யை வளர்க்கும் நோக்கத்தோடு, வடமாகாண சுற்றுலா பணியகமும், மாவட்ட செயலகம், நகர சபை போன்ற திணைக்களங்கள் இணைந்து, மன்னார் மாவட்டத்தில் செப்டம்பர் 27ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக உல்லாசப் பயண தினத்தை இம்முறை மன்னார் மாவட்டத்தில் கொண்டாடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.
உண்மையில் மன்னார் மாவட்டத்தில் 80இற்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
அந்த அடையாளங்களில் ஒன்றான கீரி கடற்கரையை மையமாகக் கொண்டு, இந்த வருடத்துக்குரிய உல்லாசப் பயண தினங்கள் மூன்று நாட்கள் 25ஆம், 26ஆம், 27ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் கொண்டாடப்பட இருக்கிறது.
உண்மையில் இந்த சுற்றுலா தின நிகழ்விலே, மன்னார் மாவட்டத்தின் கலாச்சார பாரம்பரிய மரபுரிமை அம்சங்களைப் பேணும் வகையில், மன்னார் மாவட்டத்திற்கே சிறப்பான பாரம்பரிய உணவு முறைகளை மக்களுக்கு காட்சிப்படுத்தி, அதை மக்களுக்கு பரிமாறி, மற்றும் வெளி மாவட்டங்கள், சர்வதேச ரீதியில் இருந்து வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கும் அதை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு பாரம்பரிய உணவுத் திருவிழா அமைப்பும் இந்த நிகழ்வில் ஒரு முக்கியமான இடமாக காணப்படுகிறது.
திணைக்களங்களின் பங்குபற்றுதலோடு
இதை விட மன்னார் மாவட்டத்திற்கு உரித்தான பல சிறப்பான விளையாட்டு விழாக்களும் இங்கே இந்த உல்லாசப் பயணத்துறையை வளர்க்கும் நோக்கில் மக்கள் பார்வைக்காக கொண்டாடப்பட இருக்கிறது.

25ஆம் திகதி பட்டப் போட்டிகளும், 26ஆம் திகதி கடற்கரைப் பந்தாட்டம், கயிறு இழுத்தல் போட்டி நிகழ்வுகளும், அதேபோன்று 27ஆம் திகதி மாலை 4 மணிக்கு கபடிப் போட்டிகளும் என்ற வகையிலே பல்வேறுபட்ட அம்சங்கள் இடம்பெற இருக்கின்றது.
ன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம் உள்ள அனைத்து மக்களும், நலன் விரும்பிகளும் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கெடுத்து, மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு தங்களாலான ஒத்துழைப்பு களையும் இந்த சமயத்திலே நாங்கள் வரவேற்கின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் பங்குபற்றுதலுடன் குறிப்பாக முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் அதேபோன்று அனைத்து திணைக்களங்களின் பங்குபற்றுதலோடு இந்த மூன்று நாள் நிகழ்வு நடைபெற இருப்பது ஒரு முக்கியமான அம்சமாக காணப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை ஒரு பெரிய ஒரு முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், மன்னார் மாவட்டத்தின் ஒரு முக்கியமான ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டு களையும் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகளும், அந்த வெள்ளோட்ட மாக அந்த நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கான நிகழ்வுகளும் அன்றைய தினம் இடம்பெற இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சஹ்ரானுடைய விரல் சைகையை காட்டிய குற்றவாளிகள் : நீதிமன்றத்திற்குள் நடந்தது என்ன...!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
ஈரானை முற்றிலுமாக அழிப்பதாக மிரட்டல் விடுத்த ட்ரம்ப்: அரண்டுபோன ஐக்கிய நாடுகள் பொதுச் சபை News Lankasri