பலரை காவு கொண்ட படகு விபத்து! நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் - கிண்ணியாவில் தொடரும் பதற்றம் (video)
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட படகு விபத்தில் பலர் உயிரிழந்த நிலையில் குறித்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்ணியாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த விபத்திற்கு அதிகளவானோரை படகில் ஏற்றியமையே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து அங்கு சில இளைஞர்கள் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அங்கு பதற்றமான சூழல் தொடர்வதாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த பதற்ற நிலை காரணமாக கிண்ணியாவிலிருந்து மட்டக்களப்பிற்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் வீட்டிலுள்ள பாதுகாப்பு கமராக்கள் உடைக்கப்பட்ட நிலையில் வீட்டு கதவு உடைக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்கள் மற்றும் வீடியோ - பதுர்தின் சியானா


பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam