பண்டாரநாயக்கவின் மொழி கொள்கையால் மழுங்கி போனோம்-சந்திம வீரக்கொடி
பண்டாரநாயக்கவின் மொழி கொள்கை காரணமாக இலங்கையர்கள் மழுங்கி போனதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வறிய மக்கள் முன்னேற வேண்டுமாயின் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்

மீண்டும் அந்த நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது.வறிய அப்பாவி மக்கள் முன்னேற வேண்டுமாயின் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தேனும் ஆங்கில மொழி கல்வியை வழங்க வேண்டும்.
அப்படி நடந்தால், நாடடுக்கு எதிர்காலம் இருக்கும். எமக்கு ஒரு பெருமை இருக்கின்றது. சிங்களவர்கள் என்ற வகையில் சிங்கள மொழி தொடர்பில் பெருமை இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு தமிழ் மொழி குறித்த பெருமை இருக்கின்றது. செயற்பாட்டு ரீதியாக சிந்தியுங்கள்.
சிங்களம் மட்டுமே சட்டத்தை கொண்டு வந்த பண்டாரநாயக்க

இவ்வளவு காலமும் இந்த நாட்டுக்கு என்ன நடந்தது?. முதல் விடயம் நாங்கள் மழுங்கி போனோம். எமது கட்சியின் தலைவர் பண்டாரநாயக்கவின் மொழி கொள்கை காரணமாக நாங்கள் மழுங்கி போனோம் எனவும் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri