சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் நீல நிற அட்டை அறிமுகம்
சர்வதேச உதைபந்தாட்ட போட்டிகளில் நீல நிற அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.
சர்வதேச உதைபந்தாட்டப் போட்டியை மேம்படுத்துவதற்காக இவ்வாறு நீல நிற அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
உதைபந்தாட்ட போட்டிகளில் வீரர்கள் தவறு செய்தால் அல்லது நடுவருடன் கருத்து வேறுபாட்டை மேற்கொண்டால் நீல அட்டை காட்டப்பட்டு 10 நிமிடங்களுக்கு மைதானத்தில் இருந்து நீக்கப்படுவார்கள என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிபா அறிவிப்பு
இதன்படி இரண்டு முறை நீல அட்டை காட்டப்பட்டால் அந்த வீரர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்.
1970 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் மஞ்சள் , சிவப்பு அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் உதைபந்தாட்ட விளையாட்டில் பயன்படுத்தப்படும் முதல் புதிய அட்டை இதுவாகும்.
FIFA wishes to clarify that reports of the so-called 'blue card' at elite levels of football are incorrect and premature.
— FIFA Media (@fifamedia) February 8, 2024
Any such trials, if implemented, should be limited to testing in a responsible manner at lower levels, a position that FIFA intends to reiterate when this…
மேலும், சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் இதில் கையொப்பமிட்டுள்ளது. எனினும் தற்போது நீல அட்டைச்சோதனைகள் விளையாட்டின் கீழ் மட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும்என்றும், அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச கால்பந்து சங்க வாரியத்தின் வருடாந்த கூட்டத்தில் இது விவாதிக்கப்படும் என்றும் பிபா கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |