கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்
களுத்துறை, பதுரலிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முயற்சித்த மாணவன், கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவனும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் போது மாணவன் உயிரிழந்துள்ளார் என பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் பலி
உயிரிழந்த மாணவர் பதுரலிய, இலுக்பத, டெல்கிட் வத்த பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் திலான் என்ற 17 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பதுரலிய பொலிஸ் பிரிவின் கலுகல சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மற்றுமொருவர் காயம்
பதுரலிய பிரதேச செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டி, பதுரலியவிலிருந்து அகலவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 21 வயதுடைய நவராஜா கசுன் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெப் வண்டியின் சாரதியும் பதுரலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam