முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறை
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் புதுக்குடியிருப்பில் இன்றையதினம் (01.08.2025) இரத்ததானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இரத்ததானம் செய்த பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கியில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்தின் ஏற்பாட்டில், வைத்தியர் எஸ்.டீ.சமரசிங்கவின் பரிசோதனையின் கீழ் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் புதுக்குடியிருப்பு பொலிஸார், இளைஞர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கி வைத்திருந்தார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா



