தெற்காசிய பிராந்தியத்தில் உருவாகியுள்ள முக்கிய சுகாதார பிரச்சினை
தெற்காசிய பிராந்தியத்தில் பொதுமக்கள் மத்தியில் உயர் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.
இது 70 வயதுக்குட்பட்டவர்களின் இறப்புகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது என்று இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
வாராந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொற்று அல்லாத நோய்களுக்கான ஆலோசகர், சமூக மருத்துவர் செரீன் பாலசிங்க, இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று பெரியவர்களில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிகப்படியான உப்பு
இது பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற கடுமையான நிலைமைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக இதய செயலிழப்பு, சிறுநீரக நோய் மற்றும் உறுப்பு செயலிழப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
எனவே சரியான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவது உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவும் என்று அவர் ஆலோசனை வெளியிட்டுள்ளார். அதிகப்படியான உப்பு உட்கொள்வதாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படலாம்.
இதேவேளை சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம் என்பது கண்டறியப்பட்டுள்ளது எனினும்; உடற்பயிற்சி மற்றும் சீரான உணவு மூலம் அதனைக் கட்டுப்படுத்தலாம் என்று தொற்று அல்லாத நோய்களுக்கான ஆலோசகர், சமூக மருத்துவர் செரீன் பாலசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மக்கள் தாங்கள் உட்கொள்ளும் உப்பின் அளவை ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)