திலீபனை நினைவேந்தாமல் தடுப்பது எவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது! - சீ.வீ.கே. சிவஞானம்
உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது என்பது எமது அடிப்படை உரிமை. அதிலும் அஹிம்சை வழியில் எமது இன விடுதலைக்காக உண்ணாநோன்பு இருந்து ஆகுதியாகிய தியாகி திலீபனை நினைவுகூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் (CVK Sivagnanam ) தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனை நினைவுகூர்ந்தமைக்காகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை யாழ். பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்.....
யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் திடீர் கைது
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுதலை
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கைது செய்யப்பட்டமைக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri