ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: தென்னாப்பிரிக்க திமிங்கிலங்களுக்கு நேர்ந்துள்ள விபரீத ஆபத்து
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானுடன் நடத்தி வரும் போரின் தாக்கம், வெறும் பொருளாதாரச் சரிவோடு நின்றுவிடாமல், தற்போது கடலில் வாழும் திமிங்கிலங்களின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் போன்ற முக்கியமான கடல் வழிப்பாதைகள் ஈரான் மற்றும் அமெரிக்காவால் முடக்கப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை முடக்கம்
இதனால், உலக நாடுகளின் சரக்குக் கப்பல்கள் இந்தப் பாதைகளைத் தவிர்த்துவிட்டு, தென்னாப்பிரிக்காவின் 'நன்னம்பிக்கை முனை' வழியாகச் சுற்றிக்கொண்டு செல்கின்றன.

இதனால் தென்னாப்பிரிக்கக் கடலோரப் பகுதிகளில் கப்பல் போக்குவரத்து இருமடங்காக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதி திமிங்கிலங்களின் சொர்க்க பூமியாகக் கருதப்படுகிறது.
இங்கு ஹம்ப்பேக், சதர்ன் ரைட் போன்ற 40க்கும் மேற்பட்ட திமிங்கில இனங்கள் வாழ்கின்றன. கப்பல் போக்குவரத்து நான்கு மடங்கு வேகம் எடுத்துள்ளதால், உணவைத் தேடி அலையும் திமிங்கிலங்கள் மீது இராட்சதக் கப்பல்கள் மோதும் அபாயம் 'மிகவும் அதிகரித்துள்ளதாக' சர்வதேச திமிங்கில ஆணைக்குழு (IWC) ஆய்வு எச்சரிக்கிறது.
இது குறித்துப் பிரிட்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் எல்ஸ் வெர்முலன் கூறுகையில், "கப்பல்களில் செல்பவர்கள் திமிங்கிலங்களைக் கண்டு மகிழ்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.
ஆனால், அந்த வேகமான கப்பல்கள் கூட்டமாக இருக்கும் திமிங்கிலங்கள் மீது மோதி அவற்றைக் கொன்று விடுவதைக் காணும்போது இதயம் துடிக்கிறது," என்று வேதனை தெரிவித்துள்ளார்.
விபரீத ஆபத்து
பல நேரங்களில் கப்பல் மோதி உயிரிழக்கும் திமிங்கிலங்கள் ஆழ்கடலில் மூழ்கி விடுவதால், அவற்றின் இறப்பு எண்ணிக்கை கணக்கில் வராமலேயே போய்விடுகிறது.
கப்பல்கள் செல்லும் பாதையைச் சற்றே கடற்கரையிலிருந்து தள்ளி மாற்றியமைப்பதன் மூலம், இந்த விபத்துகளை 20 முதல் 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும், கப்பல்களின் வேகத்தைக் குறைத்தல் மற்றும் திமிங்கிலங்கள் இருக்கும் பகுதியை முன்கூட்டியே கண்டறியும் மொபைல் செயலிகளைப் பயன்படுத்துவது குறித்தும் தென்னாப்பிரிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
மனிதர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் போர், எவ்விதத் தொடர்பும் இல்லாத கடல் வாழ் உயிரினங்களின் பேரழிவிற்கு வழிவகுப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முறையற்ற செய்திகள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri