கனடாவின் கரையோர மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பனிப்புயல் எச்சரிக்கை
கனடாவின் கரையோர மாகாணங்களில் சீரற்ற காலநிலை நிலவி வருவதால் பனிப்புயல் நிலைமை குறித்து கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக நோவா ஸ்கோஷியாவில் மாகாணம் முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு நிலைமை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில பகுதியில் 20 முதல் 40 சென்றி மீட்டர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
இந்நிலையில் பிரின்ஸ் ஒப் எட்வர்ட் பிராந்தியத்திலும் கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு,பல பிராந்தியங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் இலங்கை தேசியக் கொடிக்கு மேலாக உயர்ந்த தமிழீழ தேசியக் கொடி : பாரிய போராட்டம் முன்னெடுப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |