மிளகாய் பயிர்களில் ஒருவித வாடல் நோய்: விவசாயிகள் பாதிப்பு (Photos)
மிளகாய் பயிர்களில் ஒருவித வாடல் நோய் பரவுவதால் தாம் நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளைப் பிரதேசத்தில் மிளகாய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாம் பரம்பரை பரம்பரையாக மேட்டுநிலத்தில் மிளகாய், கத்தரி, வெண்டி, பயற்றை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
மிளகாய் செய்கையில் ஒருவித வாடல் நோய்
இந்த நிலையில் இம்முறை மேற்கொண்டுள்ள மிளகாய் பயிர்ச்செய்கையில் ஒருவித வாடல் நோய் காரணமாக மிளகாய் செடிகள் நன்கு பூத்து காய்க்கும் நிலைக்கு வரும் வேளையில் திடீரென வாடிப்போய் இறந்து விடுகின்றன.
விவசாயிகள் பாதிப்பு
இதனால் நாம் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், மிளகாய் செய்கை இடைநடுவில் கைவிடப்படுவதனால் மரவள்ளி போன்ற மாற்றுப் பயிர்களை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக உஷ்னம் காரணமாகவும் மற்றும் பங்கஸ் தாக்கத்தினாலும், மிளகாய் செடிக்கு இந்த நோய் வருகின்றது என விவசாயப் போதனாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.