நெல் விற்பனை பாதிப்பு! வவுனியா விவசாயிகள் கவலை (PHOTOS)
சிறந்த விலையின்மை மற்றும் நெல்லை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் செலுத்தாமையினால் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாக வவுனியா விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தற்போது சிறுபோக அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் ஒரு ஏக்கருக்கு 30 மூடை என்ற ரீதியில் விளைச்சல் கிடைக்கின்றது. எனினும் நெல் ஆலை உரிமையாளர்களோ வெளிமாட்டங்களில் இருந்தோ நெல்லை கொள்வனவு செய்வதற்கு எவரும் வராத நிலை காணப்படுகின்றது.
டீசல் பிரச்சினையே காரணமாக உள்ளது. இதனால் நிர்ணய விலை வவுனியாவில் காணப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நெல் விற்பனை வீழ்ச்சி
கடந்த முறை சேதன பசளையினை பயன்படுத்தி செய்த போதிலும் விளைச்சல் குறைவாக காணப்பட்ட போதிலும் 10ஆயிரம் ரூபா வீதம் ஒரு மூடை விற்பனை செய்திருந்தோம்.இம்முறை 40ஆயிரம் ரூபாவுக்கு இரசாயன பசளையிட்டும் கொள்வனவாளர்கள் இன்மையால் நல்ல விலை கிடைக்கவில்லை.
நெல்லையும் விற்பனை செய்ய முடியாமல் இருக்கின்றது. 5900 மற்றும் 6900 என்ற ரீதியில் நெல்லை சிலர் கொள்வனவு செய்தாலும் 15 முதல் 20 நாட்கள் கழித்தே பணத்தை தருகின்றனர்.
அத்துடன் நெல்லை கட்டுவதற்கு பைகள் இல்லை. ஓர பை 160 ரூபா வரையில் விற்கப்படுகின்றது. அதனால் பழைய பைகளையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சணல் ஒரு கிலோ 2000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.
அதேவேளை நெல்லை விற்பனை செய்ய நெல் ஆலைகளுக்கு கொண்டு சென்றாலும் அவர்கள் நெல்
வேண்டாம் என்கின்றார்கள். அதனால் திருப்பி கொண்ட வர வேண்டிய நிலை உள்ளது எனவும்
அவர்கள் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
