தலதாமாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்
கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று (16) அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெலவினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.
வழிபாட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பிரதமர் மல்வத்து மஹா விகாரை பீட மஹாநாயக்கர் திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அனுசாசனத்தைத் தொடர்ந்து தேரர் பிரதமருக்குப் புத்தர் சிலையொன்றைப் பரிசளித்தார்.
வழிபாட்டில் பிரதமருடன் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே,
இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, நாடாளுமன்ற
உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ச, உதயன சாமிந்த
கிரிந்திகொட, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர்
பேராசிரியர் கபில குணவர்தன, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல உள்ளிட்ட மக்கள்
பிரதிநிகள் பலர் கலந்து கொண்டனர்.