புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பெண்ணொருவர் காயம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 64 வயதுடைய பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணியிலிருந்த குப்பைகளைக் கூட்டி நெருப்பு வைத்த போது அதிலிருந்த குண்டு வெடித்ததில் குறித்து அனர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது.
அம்மன் கோயில் வீதி ,5 ம் வட்டாரம் ,இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 64 வயதுடைய இந்திரன் மரியரெத்திணம் எனும் பெண் ஒருவரே காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதோடு, குறித்த பகுதியில் வேறு வெடிபொருட்கள் இருக்கிறதா என்பது
தொடர்பிலும் ஆராய்ந்து வருகின்றனர்.


