முல்லைத்தீவு சுவாமி தோட்டப்பகுதியில் குண்டு வெடிப்பு - ஒருவர் படுகாயம்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளம்பில்- சுவாமி தோட்டப்பகுதியில் குப்பைக்கு தீமுட்டியபோது குண்டு ஒன்று வெடித்ததில் ஆண் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சுவாமி தோட்டம் தென்னந்தோட்டப்பகுதியில் குப்பைகளைக் கூட்டி எரித்த போது மண்ணில் புதைந்திருந்த குண்டு ஒன்று வெடித்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அப்பகுதியில் வெடிக்காத நிலையில் எறிகணை ஒன்றும் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் காணப்படும் அபாயகரமான வெடிபொருட்களை மீட்பதற்கான சட்ட
நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றார்கள்.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
