முல்லைத்தீவு வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலி - மற்றுமொருவர் படுகாயம்
முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள காணியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தில் சிக்கி ஸதலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நபர் காயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய குமாரசாமி சந்திரமோகன் டிசான் என்பவரே உயிரிழந்துள்ளதுடன், முல்லைத்தீவைச் சேர்ந்த 20 வயதுடைய செல்வகுமார் சயந்தரூபன் என்பவரே காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


