விமானப்படையின் துப்பாக்கிச்சூட்டு பயிற்சி தளத்தில் பதிவான வெடிப்பு: விசாரணை குழு நியமனம்
கல்பிட்டியின் கந்தகுளி பகுதியில் உள்ள விமானப்படையின் துப்பாக்கிச்சூட்டு பயிற்சி தளத்தில் பதிவான வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் (26.09.2023) இடம்பெற்ற குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிபுணர்கள்
இந்த சம்பவத்தில் 28 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு நேற்று இரண்டு நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam