கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படவுள்ள நிறுவனங்கள்: அரசு அதிரடி நடவடிக்கை
உரிய ஒப்பந்தங்கள் இல்லாத மற்றும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தலைமையில் நேற்று(15) சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலிலேயே சுகாதார அமைச்சு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருந்துகளின் விலைகள்
மேலும் இந்த கலந்துரையாடலில், விலை நிர்ணயக் குழு ஒன்றின் ஊடாக மருந்துகளின் விலைகள் தொடர்பாக தீர்மானங்களை முன்வைக்குமாறும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டில் மருந்து தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான மருந்துகளை சரியான முறைகளில் இறக்குமதி செய்ய இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
மேலும், உரிய ஒப்பந்தங்கள் இல்லாத நிறுவனங்களையும் தரமற்ற மருந்துகளை வழங்கும் நிறுவனங்களையும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க இதன்போது சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
கலந்துரையாடலில் அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
