அரச ஊழியர்களால் மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் (Photos)
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கையினை நிறுத்தக்கோரி அரசாங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் கறுப்பு வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய தொழிற்சங்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியிருந்தன.
அரசாங்கத்தின் வரிக்கொள்கை
வான் உயரத்தில் பணவீக்கம் நடுவீதியில் அரச உத்தியோகத்தர்கள், வானுயரும் வரிச்சுமை நாட்டை விட்டகலும் தொழில் வல்லுனர்கள் போன்ற பல்வேறு சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டவிரோதமான அரசாங்கத்தில் தன்னிச்சையான அடக்குமுறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராக என்னும் தலைப்பில் ஜனவரி 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரையில் கறுப்பு வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
இதனை முன்னிட்டும் வரிக்கொள்கையினை நிறுத்த கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தில் கொள்ளையினை மேற்கொண்டவர்கள் இராஜபோகம் அனுபவிக்கும் நிலையில் சாதாரண அரச ஊழியர்களை வருத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.





உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
