உகண்டாவில் ராஜபக்சவினரின் கறுப்பு பணம்
இலங்கையின் அரசியல்வாதிகள் வெளிநாட்டு கடனைகளை பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவில்லை எனவும் அவர்கள் தரகு பணத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டனர் எனவும் பேராசிரியர் அனுர குமார உத்துமன்கே மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சிங்கள வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவர்கள் இதனை கூறியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கொள்ளையடிப்பு பிரதானமான ஒரு காரணம். நாட்டின் ஆட்சியாளர்கள் கடனை பெறும் போது அவர்களுக்கு தரகு பணம் கிடைக்கும். நாட்டிற்னு கடனுதவியின் கீழ் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் போது அரசியல்வாதிகள் அவற்றில் இருந்து தரகு பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
கடந்த காலங்களில் வணிக சந்தைகளில் கடன் பெறப்பட்டுள்ளது. தரகு பணத்தை பெறுதற்காகவே வணிக சந்தைகளில் கடனை பெற்றுள்ளனர். இவ்வாறு பெறப்பட்ட பல கடன்கள் தமது அரசியல் திட்டங்களுக்காக பயன்படுத்தியுள்ளனர்.
தமது வாழும் பிரதேசங்களில் விளையாட்டு மைதானங்களையும் வீதிகளையும் பயன் பெற முடியாது துறைமுகங்களை நிர்மாணிக்கவும் இந்த கடன்களை பெற்றனர். தமது ஊருக்கு இவற்றை செய்து வாக்குகளை பெறுகின்றனர்.
அதுவும் இவர்களுக்கு சொத்து. வீதிகளை நிர்மாணிக்க ஒப்பந்தங்களை வழங்குவோரிடமும் தரகு பணத்தை பெறுகின்றனர். கடன் பெற்ற அரசியல்வாதிகளுக்கு அது பற்றி பொறுப்பு இருக்காது, காரணம் அவர்கள் இந்த கடனை திரும்ப செலுத்த போவதிலை.
நாட்டின் அரசே பணத்தை செலுத்த வேண்டும். இலங்கையில் மிஸ்டர் டென் பெர்சன்ட்( திரு 10 வீதம்) எனக் கூறப்படும் நபர்கள் இருக்கின்றனர். இவை வெறுமனே உருவான பெயர்களா?.
இலங்கையில் உகண்டா நாட்டின் நாணயத்தாள்களை அச்சிட்டு, அதனை அந்த நாட்டுக்கு கொண்டு சென்று, அங்குள்ள வங்கிகளில் வைப்புச் செய்து வெளிநாட்டு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் கொள்ளையர்களை பாதுகாக்கின்றன. உலகில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கும் ஒரு கிலோ மீற்றர் வீதியை நிர்மாணிக்க பெருமளவு பணத்தை செலவிட்ட ஒரே நாடு இலங்கை.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் உலகில் ராஜபக்சவினருக்கு நெருக்கமாக இருந்த நட்பு நாடு எது?. சீசெல்ஸ் நாடே அவர்களின் சிறந்த நட்பு நாடு, அந்த காலத்தில் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்று பிரதான அந்நாடாக இருந்தது.
தொடர்ந்தும் ஒரு நாடு கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது, அவற்றை சர்வதேச நாடுகள் கட்டுப்படுத்தும். உலகில் தற்போது கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் நாடுகள் வரிசையில் உகண்டா 10வது இடத்திலும் இலங்கை 18வது இடத்திலும் உள்ளன.
2020 ஆம் ஆண்டு இலங்கை 21 ஆம் இடத்தில் இருந்தது 2021 ஆம் 18 வது இடத்திற்கு வந்துள்ளது. அப்படியானால், நாட்டுக்கு இருக்கும் பாதுகாப்பு என்ன?. இலங்கை முன்னர், இந்த பட்டியலில் இருந்தில்லை.
தற்போது யார் ராஜபக்சவினரின் சிறந்த நட்பு நாடு, எந்த நாடு பயணம் செல்லும் போது ஜெட் விமானத்தை வழங்கியது?. உகண்டா. உகண்டாவுக்கும் இவர்களுக்கும் இருக்கும் தொடர்பு என்ன?. உகண்டா போன்ற நாடுகளிலேயே கறுப்பு பணம் வெள்ளை பணமாக மாற்றப்படுகிறது.
கறுப்பு பணம் என்பது சம்பாதித்த வழியை காட்ட முடியாத பணம். கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் நாடுகளே ராஜபக்சவினருக்கு எப்போதும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்துள்ளன.
பயணம் ஒன்றை மேற்கொண்ட ஜெட் விமானத்தை வழங்குவது உகண்டா நாடு என்றால், இவர்களுக்கு இடையிலான நட்பு எந்தளவுக்கு இருக்கும் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



