ஜூலை இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசு.. எழுந்துள்ள கடும் கண்டனங்கள்
தமிழர்களின் உயிர்கள் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டு அவர்களது வீடுகள், வணிகநிலையங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டு வடக்கிற்கு தமிழர்களை விரட்டி அடித்த கறுப்பு ஜூலை இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
சகோதரத்துவம் எனும் தொனிப்பொருளில் தெற்கிலிருந்து யாழ். வரும் தொடருந்து தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்திக் குறிப்பில், பௌத்த - சிங்கள பேரினவாத அரசினால் இனவெறி பிடித்த காடையர்களை ஏவி தமிழர்களை திட்டமிட்டு இனவழிப்பு செய்த மிக முக்கியமான கறுப்பு வரலாற்றின் பக்கங்களான ஜூலை கலவரத்தில் தமிழர்களின் உயிர்கள் கொடூரமான முறையில் பறிக்கப்பட்டு அவர்களது வீடுகள், வணிக நிலையங்கள் வாகனங்கள் எரிக்கப்பட்டு வடக்கிற்கு தமிழர்களை விரட்டி அடித்தது.
அரசின் செயற்பாடுகள்
உங்கள் தேசம் செய்த மாபெரும் இனப்படுகொலை நிகழ்வினை மறைக்க முயலும் அரசின் செயற்பாடுகளிற்கு வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். ஜூலை 23ஆம் திகதி கறுப்பு ஜூலை எனவும் இனவழிப்பு நாளாகவும் தொடர்ச்சியாக நினைவு கூரப்படுகின்றது.
ஆனால், 2022இல் இருந்து இதற்கு வேறு பெயர்களை வழங்க JVP/NPPயினர் முனைகின்றார்கள். அரச ஆதரவுச் சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுத் துயரத்தை அதே பெயரில் நினைவுகொள்ளக் கூட திராணியற்றவர்களாக இருக்கின்றார்கள்.
ஜூலை கலவரமான தமிழின இனப்படுகொலை தொடர்பிலும் சர்வதேச விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் அதற்கான பிரதான பின்னணியாக செயற்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் சிங்கள இனவாத கடையர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுடன் உரிய நியாயம் வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு இதற்காக அனைவரும் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 14 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
