சாந்தனின் மறைவிற்கு யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி
சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
பிரதமர் ராஜுகாந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தநிலையில் நேற்று முன் தினம் சாந்தன் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி காலை காலமானார்.

சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்
மருத்துவமனையில் சிகிச்சை
கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன், கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், இலங்கை தமிழரான சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்திய மத்திய அரசு அனுமதி
கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
எனினும் இன்று சிகிச்சை பலனின்றி சாந்தன் காலமானார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தனது மகனை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கையிலுள்ள சாந்தனின் தாயார் மகேஸ்வரி உருக்கத்துடன் கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் நாடு திரும்ப அண்மையில் இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்ததமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்…
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




