சுவிட்ஸர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மன்னார் ஆயர்
மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, கடந்த வெள்ளிக்கிழமை (21.08.2025) சுவிட்ஸர்லாந்து நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
வருடா வருடம் சுவிஸ் வாழ் தமிழ்க் கத்தோலிக்க இறைமக்கள் கொண்டாடும் மருதமடு அன்னையின் திருவிழாவானது இவ்வருடமும் சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக இயக்குனர் அருட்பணி அ.யூட்ஸ் முரளிதரன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாட ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மருதமடு அன்னையின் திருவிழா
ஒவ்வொரு வருடமும் பாசல் மாநிலத்தில் அமையப்பெற்றுள்ள மரியஸ்ரைன் திருத்தலத்தில் இடம்பெறும் இவ்விழாவானது தவிர்க்க முடியாத காரணத்தினால் கருப்பு மாதா ஆலயத்தில் Kloster Einsiedeln திருத்தலத்தில் இம்முறை இடம்பெறவுள்ளது என்பதும் அறியத்தரப்பட்டுள்ளது.

எனவே, இவ்விழாவானது இன்று (23.08.2025) நண்பகல் 12.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட புதிய ஆயர் பேரருட்கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதை முன்னிட்டே மன்னார் ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை, சுவிட்ஸர்லாந்து நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் செய்துள்ள மாஸ் வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan