நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து போராடும் ட்ரம்ப்! வெள்ளை மாளிகை அறிவிப்பு
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கப்படும் ‘பிறப்புரிமைக் குடியுரிமை’ சட்டத்தை இரத்து செய்யக் கோரி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது.
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகரான ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை அறிவிப்பு
அல் ஜசீரா ஊடகத்தின் செய்தியாளர் ஆலன் ஃபிஷரிடம் பேசிய அவர், பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வர ட்ரம்ப் அரசு இன்னும் தீவிரமாக முயன்று வருவதாகவும், அடுத்தகட்டமாக இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தை நோக்கி தங்களது அழுத்தத்தை நகர்த்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You May Like This..
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam