இலங்கையிலும் இந்தியாவிலும் கொண்டாடப்பட்ட கிழக்கு ஆளுநரின் பிறந்த நாள் (Photos)
கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் பிறந்த நாள் இலங்கையிலும் இந்தியாவின் 30 மாவட்டங்களில் 200யிற்கு மேற்பட்ட இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இலங்கையில் கொழும்பு, திருகோணமலை, மட்டகளப்பு, அம்பாறை, பதுளை, நுவரெலியா, மாத்தறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொண்டாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மர நடுகை நிகழ்வுகள்
இந்தியாவில் உள்ள திருச்சி, சேலம், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,சிவகங்கை, தர்மபுரி,நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள், மாற்று திறனாளிகள் இல்லங்களை சேர்ந்த 5000 யிற்கும் மேற்பட்டவர்களுக்கு, செந்தில் தொண்டமானின் பிறந்த தினத்தை முன்னிட்டு உணவு உட்பட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இரத்த தான முகாம்கள், மர நடுகை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
















