முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் பிறந்தநாள் நினைவேந்தல் நிகழ்வு!
உடுப்பிட்டி சிங்கம் என வர்ணிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான அமரர் முருகேசு சிவசிதம்பரத்தின் 102 ஆவது பிறந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நேற்று (20) அன்னாரது உருவச் சிலையிலும், வீட்டிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வு
காலை நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள அன்னாரின் திருவுருவச் சிலையில் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் கு.சுரேந்திரன், உப. தவிசாளர் தி.தயாபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையிலும் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









