யாழ்.கசூரினா சுற்றுலா கடற்கரையில் தீ விபத்து!
யாழ். காரைநகர் கசூரினா கடற்கரையை அண்மித்த பகுதிகளில் நேற்று(20) இரவு பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 9 மணி அளவில் காரைநகர் கசூரினா கடற்கரை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள சவுக்கு மரங்கள், பனை மரங்கள் புற்கள் ஆகியவற்றில் தீ பரவியுள்ளது.
இதனை அறிந்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கும் கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற பொலிஸாரும், கடற்படையினரும், பிரதேச சபையினரும் பவுசர்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீப்பரவலுக்கான காரணம்
இதனையடுத்து, அதிகாலை 2 மணி அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன்போது பெருமளவான மரங்கள் தீயினால் எரிந்து நாசமாகியது.

மேலும், தீப்பரவலுக்கான காரணம் அறியப்படவில்லை. ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam