லசந்தவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் ரணில் குறித்து தகவல்!
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியதாகக் கூறப்படும் சில பொய்யான வாக்குறுதிகளை வெளிப்படுத்தும் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட செய்தி சண்டே லீடர் செய்தித்தாளின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickramatunga) வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, 'தலைகுனியாமை மற்றும் அஞ்சாமை' என்ற தலைப்பில் நூல் ஒன்று நேற்றைய தினம் (27.03.2023) கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 2015ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் லசந்த விக்ரமதுங்கவின் குடும்பத்தாருக்குக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று ரணில் விக்ரமசிங்க உறுதியளித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் வழங்கிய உறுதிமொழி
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் லசந்த விக்ரமதுங்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சில கலந்துரையாடல்களையும், அப்போதைய பிரதமர் வழங்கிய உறுதிமொழிகளையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது.
லசந்த விக்கிரமதுங்கவின் முன்னாள் மனைவி ரெய்ன் விக்ரமதுங்கவால் எழுதப்பட்ட
இந்த நூல், 2009ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தி சண்டே லீடர் செய்தித்தாளின்
முன்னாள் சகாக்கள், ஊடகவியலாளர்கள், நண்பர்கள் மற்றும் முன்னாள் சகாக்கள்
ஆகியோரின் முன்னிலையில் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
