சபாநாயகரை கடும் தொனியில் விமர்சித்த அவை தலைவர்
நாடாளுமன்றில் சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோரை அவைத் தலைவர் பிமல் ரட்நாயக்க கடுந்தொனியில் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் அநாகரீகமாக செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக எதிர்க்கட்சியின் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் ஆளும் கட்சியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை இழி சொற்களால் நிந்திப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

சில பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் உரையாற்றுவதற்கு அச்சம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சபாநாயகரும் பிரதி சபாநாயகரும் அவர்களது பணிக்குழாமும் இந்த நடவடிக்கைகளை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் கடும் தொனியில் விமர்சனம் செய்துள்ளார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றின் நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியிருந்த போதிலும் சபாநாயகரும் பிரதி சபாநாயகரும் இந்த விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் குறிப்பிடப்பட்டுள்ளவாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரம் குறைந்த செயல்பாடுகளை கண்டிக்கவும் கண்டிக்கவும் ஏன் தயக்கம் காட்டப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மிகவும் இழிவான சொற் பிரயோகங்களை சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரங்கள் தொடர்பில் அசமந்தப் போக்கை பின்பற்றி வருவது வேதனையை அளிப்பதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 22 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam