வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்: பிமல் உறுதி
தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
“ஜனாதிபதித் தேர்தலின்போதும், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் நாம் வழங்கிய வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவோம். இரண்டு தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு மக்களின் அமோக ஆணை கிடைத்துள்ளது.
சேறுபூசும் நடவடிக்கைகள்
மாற்றத்தை விரும்பிய மக்கள், எம்மை நம்பி வாக்களித்துள்ளார்கள். நாம் முன்வைத்த கொள்கைத் திட்டங்களை ஏற்றே எமக்கு அவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

எனவே, மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம். எதிரணியினர் எம் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கலாம். ஆனால், நாம் உண்மையாக, நேர்மையாகச் செயற்படுவதால் எதற்கும் அஞ்சமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam