முத்தையன்கட்டு இளைஞன் படுகொலை: அமைச்சர் பிமல் விளக்கம்
முத்தையன்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று(17.08.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முத்தையன்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு நாளையதினம் வடக்கு கிழக்கு பல பகுதிகள் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் கோரியுள்ளார்.
இராணுவத்தினர் கைது
இவர் இதற்கு முன்னர் முத்தையன்கட்டு பகுதியில் பல பதவிகளை வகித்த காலப்பகுதியில் அங்கு சென்றுள்ளாரா? அங்குள்ள நிலைமைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரா? தற்பொழுது அரசியல் இலாபத்திற்காக மட்டுமே செயற்பட்டு வருகின்றார்.
முத்தையன்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri
