கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலப் பணிகளை விரைவுபடுத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க பணிப்புரை !
நிர்மாணிக்கப்பட்டு வரும் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் நிரோஷன் ரத்நாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
சனிக்கிழமை (31) மாலை கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், பாலத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
தேசிய மக்கள் சக்தி கிண்ணியா பிரதேச அமைப்பாளர் எம்.ஈ.எம். ராஃபிக் விடுத்த அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமைந்தது.
உறுதி
அமைச்சர் பாலத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு, தாமதத்திற்கான காரணங்களை ஆராய்ந்தார்.
பாலப் பணிகள் முடியும் வரை தற்காலிக ஏற்பாடாக முன்னெடுக்கப்பட்டு வரும் படகுச் சேவையை நேரில் பார்வையிட்ட அமைச்சர், அதில் பயணித்த மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

சேவையின் திருப்தி மற்றும் பாதுகாப்புக் குறித்து பயணிகளிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
மக்களின் கஷ்டங்களை தான் உணர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், எஞ்சியுள்ள கட்டுமானப் பணிகளை மிகக் குறுகிய காலத்திற்குள் முடித்து, பாலத்தை மக்கள் பாவனைக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதியளித்தார்.
பனிப்புயலில் சிக்கிய பல மாகாணங்கள்... போர்க்களமான சாலைகள்: 35 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri