இலங்கையில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்கமல்ல: அரசாங்கத்தின் அறிவிப்பு
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஊழல் விசாரணைகள் பழிவாங்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(08.10.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த கால அரசியல் குடும்பங்களின் ஆட்சி மீண்டும் நாட்டில் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.
ராஜபக்சக்கள், பிரேமதாஸக்கள் மற்றும் விக்ரமசிங்கக்களின் ஆட்சிக் காலம் தொடர்பாகவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி, சுயாதீன நீதித்துறை மற்றும் பொலிஸ் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பழைய அரசியல் விவாதங்களில் சிக்கிக்கொள்ளாமல் நாட்டின் எதிர்காலத்தை நோக்கி செயற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.