அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட அறிக்கை தவறானது – பிரமித பண்டார தென்னகோன்
வாரியபொல மினுவங்கெத்தையில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் தொடர்பாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட கருத்துக்கள் தவறானவை என்றும் அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து விமான இயக்கியின் தவறால் ஏற்பட்டதாகும் எனவும் விமானத்தின் இயந்திரத்தில் எந்தவித குறையும் இல்லை எனவும் அமைச்சர் பிமல் ரட்நாயக்க கூறியுள்ளதாகவும், இது தவறான தகவல் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்ற குழு
விமானப்படைக்கு சொந்தமான எந்தவொரு விமானமும் விபத்துக்குள்ளாகும்போது, விசாரணை நீதிமன்ற குழுவொன்று (Court of Inquiry) நியமிக்கப்பட்டு முறையாக விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
விமானியிடமிருந்து இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் விபத்துக்கான காரணம் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான விசாரணை முடிவதற்கு முன்பு விமான விபத்து தொடர்பில் குறிப்பிடுவது பொறுப்பற்ற செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் விமானப்படைத் தளபதிக்கு விசாரணை அறிக்கை அனுப்பப்படும், பின்னர் பாதுகாப்பு அமைச்சருக்கு அதனை வழங்குவதே வழக்கம் என தெரிவித்துள்ளார்.
விமானப்படை தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் வெளியிட வேண்டியது பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறுப்பாகும் என தெரிவித்தள்ளார்.
எனவே, பிமல் ரத்நாயக்க இலங்கை விமானப்படையிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்" எனவும், தனக்கு சம்பந்தமில்லாத விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் பிரமித பண்டார தென்னகோன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

வீட்டிற்கு வந்த ரோஹினியை அடித்து வெளுத்த விஜயா, பாட்டி செய்த காரியம்... அடுத்தவார சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

முடிந்த பனிவிழும் மலர்வனம் சீரியல், மாற்றப்பட்ட விஜய் டிவி சீரியல்களின் நேரம்.. முழு விவரம் Cineulagam
